தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்

புதுச்சேரி பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்

புதுச்சேரி பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்


ADDED : பிப் 29, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதுார கல்வி இயக்குனரகத்தின் உள்ள படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.மார்ச் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலை துாரக் கல்வி இயக்குனராகத்தால் மொத்தம் 20 பட்டப்படிப்புகள் வழங்கபட்டுவருகிறது. இதில் எம்.பி.ஏ.,எனப்படும் எட்டு மேலாண்மை பட்டப்படிப்புகள் உள்ளன.அவற்றில் சந்தைப்படுத்தல், நிதி, மனித வள மேலாண்மை, சர்வதேச வணிகம், பொது, சுற்றுலா, செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி,மருத்துவமனை மேலாண்மை ஆகியவை அடங்கும்.

மேலும், ஆங்கிலம்,ஹிந்தி,சமூகவியல் முதுகலை பட்டப்படிப்புகளும், எம்.காம்.,நிதி உள்ளிட்ட படிப்பும் நடத்தப்படுகின்றது.இதுமட்டுமின்றி -ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பத்திரிகை மற்றும் வெகுஜன தொடர்பு உள்ளிட்ட எட்டு யூ.ஜி.,படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

இந்த பட்டப்படிப்புகள் ஏ.ஐ.சி.டி.இ., தொலைதூரக் கல்விப் பணியகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இப்படிப்புகளுக்கு 2024 ஆண்டுக்கான சேர்க்கை தற்போது நடக்கிறது.மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் 31 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தைப் மூலம் விண்ணப்பிக்கலாம். விளக்கங்களுக்கு, உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணிலும் அல்லது ddehelpdesk@pondiuni.ac.in என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us