/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பல்கலைக் கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டம்
/
தொழில்நுட்ப பல்கலைக் கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டம்
தொழில்நுட்ப பல்கலைக் கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டம்
தொழில்நுட்ப பல்கலைக் கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டம்
ADDED : நவ 30, 2024 04:48 AM
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க கூட்டம், அரசு ஊழியர்கள் சம்மேளனம் வளாகத்தில் நடந்தது.
புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஊழியர்கள் சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
சம்மேளத்தின் கவுரவத் தலைவர் பிரேமதாசன், செயல் தலைவர் ராதகிருஷ்ணன், பொதுச்செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கவுரவத் தலைவராக ராதாகிருஷ்ணன், தலைவராக இசைவாணன், துணைத் தலைவராக விஸ்வநாதன், செயலாளராக சரவணன், துணை செயலாளராக சண்முகம், பொருளாளராக பாலு, செயற்குழு உறுப்பினர்களாக சங்கர், சுந்தர்ராஜ், செல்வகுணசீலன், துரைராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் கருவூலம் மூலம் காலதாமதம் இல்லாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், 7 வது ஊதியக்குழுவின் நிலுவை தொகையை நிலுவை இன்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் பாலு நன்றி கூறினார்.