/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலை பேராசிரியர்கள் துணை வேந்தருடன் சந்திப்பு
/
பல்கலை பேராசிரியர்கள் துணை வேந்தருடன் சந்திப்பு
ADDED : ஏப் 09, 2025 03:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் செயல்படும் பேராசிரியர்கள் அமைப்பான ஏ.பி.ஆர்.எஸ்.எம்., சங்கத்தின் தலைவர் வெங்கட் ராவ், பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஜெய்ஸ்வால், செயலாளர் தேவேந்தர், புதுச்சேரி கல்வியாளர் குரல் அமைப்பு கன்வீனர் பிரவீன் மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர்கள், புதிதாக பொறுப்பேற்றுள்ள பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபுவை சந்தித்து பேசினர்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல பேராசிரியர்கள் அமைப்பான எங்களது ஆதரவு என்றும் உண்டு என தெரிவித்தனர்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக கலந்தோசித்தனர்.

