/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைக்கழக மாணவர் பேரவை முதல்வரிடம் கோரிக்கை மனு
/
பல்கலைக்கழக மாணவர் பேரவை முதல்வரிடம் கோரிக்கை மனு
ADDED : ஏப் 04, 2025 04:20 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் காயத்திரி, நிர்வாகிகள் சஜிதா, ஸ்ரீதர், ஜெரோம் ஆகியோர் முதல்வரிடம் அளித்த மனு;
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், உள்ளூர் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 5 வழித்தடங்களில் 11 இலவச பஸ்கள் இயக்கப்பட்டது.
நிதி நெருக்கடியை காரணம் காட்டி இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கின்றனர்.
அதேபோல், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 21 படிப்புகளுக்கு மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது. தற்போது 58 துறைகள், 158 ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன.
இந்த துறைகளுக்கு அகில இந்திய அளவில் மாணவர்கள் போட்டியிடுவதால், புதுச்சேரி மாணவர்கள் உயர்கல்வி பயில முடியாத சூழலும் நீடித்து வருகிறது.
எனவே, நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்கவும், படிப்புகளில் 25 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

