தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி யில் வரலாறு காணாத ஓட்டுப் பதிவு: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நன்றி

புதுச்சேரி யில் வரலாறு காணாத ஓட்டுப் பதிவு: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நன்றி

புதுச்சேரி யில் வரலாறு காணாத ஓட்டுப் பதிவு: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நன்றி


UPDATED : ஏப் 10, 2026 07:56 PM

ADDED : ஏப் 10, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2026 07:56 PM ADDED : ஏப் 10, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தின் உயிர் மூச்சாக கருதப்படும் ஓட்டுரிமையை, புதுச்சேரி மக்கள் இந்த முறை வரலாற்று சாதனையாக மாற்றியுள்ளனர். நடந்து முடித்த சட்டசபை தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு 91.23 சதவீதம் ஓட்டு பதிவு நிகழ்ந்து, புதுச்சேரி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சாதனையை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைதளங்களில் புதுச்சேரி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

அதில், 'உங்கள் அர்ப்பணிப்பும் விழிப்புணர்வும் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது' என்ற வார்த்தைகளை பதவிட்டு புதுச்சேரி வாக்காளர்களின் பொறுப்புணர்விற்கு ஜனநாயக கடமைக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் முன்கூட்டியே 90 சதவீத ஓட்டு பதிவை எதிர்பார்த்திருந்த நிலையில், அதைத் தாண்டி இந்த சாதனை நிகழ்ந்ததுள்ளது. இது, வாக்காளர்களின் அரசியல் விழிப்புணர்வு மட்டுமல்ல, தேர்தல் இயந்திரத்தின் திறம்பட்ட செயல்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

ஒன்பது மாதங்களாக தொடர்ந்து உழைத்த தேர்தல் அதிகாரிகள், கடந்த ஒரு மாதத்தில் பகலிரவு பாராமல் பணியாற்றி, அனைத்து ஏற்பாடுகளையும் துல்லியமாக மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல் ஓட்டுச்சாவடிகளின் நிர்வாகம் வரை, ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் காட்டிய ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும், எந்தவித குளறுபடியும் இல்லாமல் அமைதியான தேர்தலை உறுதி செய்தது.

ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக 'ஸ்ட்ராங் ரூம்' களுக்கு கொண்டு செல்லப்பட்டன. எனவே, புதுச்சேரி தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “சுமுகமான, சுதந்திரமான, நேர்மையான தேர்தலை உறுதி செய்த அதிகாரிகள், பாதுகாப்பு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளது.

சாதனை ஓட்டு பதிவிற்காக, புதுச்சேரி வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us