/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
/
ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜன 31, 2024 05:34 AM

புதுச்சேரி, : புதுச்சேரி வர்த்தக சபை ஆண்டு பொதுக்குழு கூட்டம் சன்வே ஓட்டலில் நடந்தது.
சபை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரவி வரவேற்றார். மறைந்த வர்த்த சபை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச்செயலாளர் ஆனந்தன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ரவி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்தார்.
கூட்டத்தில், வணிகர் நல வாரியத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். கடந்தாண்டு ரூ. 2 கோடி ஒதுக்கியும் எந்தவித செயல்பாடும் இன்றி உள்ளது.
வணிகம் செய்யும் நபரை தலைவராக நியமிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நடக்கும் பஸ் நிலையம், சாலை, வாய்க்கால் பணிகளை வணிகர்களுக்கு பாதிப்பு இன்றி விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
ஓட்டல், கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டுதல், தாக்குதல் நடத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சுற்றுலாத்துறை, வணிக திருவிழாவை தவறாமல் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவித்த பொழுதுபோக்கு திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இணை பொதுச்செயலாளர் முகமது சிராஜ் நன்றி கூறினார்.