/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தல்
/
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தல்
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தல்
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2025 04:49 AM
புதுச்சேரி: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழி யர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என, புதுச்சேரி அரசு ஊழி யர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் கீழ், 33 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி ஆசிரியர், ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்கான நிதியில் 95 சதவீதம் புதுச்சேரி அரசு வழங்குகிறது.
அத்தொகையை மாதந்தோறும் விடுவிக்காமல், மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 6 மாத சம்பளம், 7 மாத ஓய்வூ தியம் வழங்கவில்லை.
இப்பள்ளிகளில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அக்குடும்பத்தினர் பண்டிகை கொண்டாட முடியாத நிலையை பள்ளிக் கல்வித் துறை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக ஒதுக்கிய நிதியை விடுவிக்க அரசாணை வெளியிடவில்லை. முதல்வர், கல்வி அமைச்சர், கிறிஸ்துமஸ் கொண்டாடும் வகையில் உடனடியாக ஆறு மாத சம்பளம், ஏழு மாத ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.