/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தல்
/
கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : மார் 20, 2025 04:43 AM
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், நாக தியாகராஜன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
குறு விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவசர கதியில் துவங்கப்பட்ட சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தால், தேர்ச்சி சதவீதம் குறையும். காரைக்காலில் சமூக அறிவியல் பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட இல்லை.
காரைக்காலில் 7 கோடியில் சிந்தடிக் டிராக் அறிவிப்புக்கு பாராட்டுக்கள். விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளியுங்கள். வேலை வாய்ப்பில் விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
காரைக்காலில் உள்ள பவர் கார்பரேஷனுக்கு ஒரு அறிவிப்பு கூட இல்லை. காரைக்கால் மருத்துவமனையில் சிறப்பு வல்லுநர்கள் இல்லை. நோயாளிகள் புதுச்சேரி, தஞ்சாவூர் செல்லும் வரை அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும். காரைக்காலில் மருத்துவ சூழ்நிலை மோசமாக உள்ளது. காரைக்கால் ஜிப்மரை முழுமையாக இயங்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
கடந்த 15 ஆண்டு பழமையான 108 ஆம்புலன்ஸ் இயங்கி வருகிறது. அவுட்சோர்சிங் முறையில் ஆம்புலன்ஸ் இயக்கம் என கூறி இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டவர்களால் கோவில் சொத்துக்கள் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கையின்படி, அறங்காவலர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கோவில் சொத்துக்களை பாதுகாக்க அனைத்து சொத்துக்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும். காரைக்கால் துறைமுகம் எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ளது. பி.ஆர்.டி.சி., பஸ்கள் காரைக்காலில் முழுமையாக இயங்குவது இல்லை. வார விடுமுறை நாட்களில் பஸ்களை நிறுத்தி விடுகின்றனர் என, பேசினார்.