ஓய்வு பெற்ற பல்கலை., ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வலியுறுத்தல்
ஓய்வு பெற்ற பல்கலை., ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜன 05, 2026 04:21 AM
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு காலத்தோடு பென்ஷன் வழங்க வேண்டும்மென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க தலைவர் இசைவாணன் அறிக்கை:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தொழில்நுட்ப பல்கலைக் கழக பதிவாளரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, பென்ஷன் தொகையை காலத்தோடு, அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுத்து பென்ஷன் பெறவேண்டிய நிலை உள்ளது.
கடந்த மாதத்திற்கான பென்ஷன் தொகை இதுவரை வழங்கவில்லை. இப்படி செய்தால் போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும்.
பொங்கல் பண்டிகை வர உள்ளதால், உடனடியாக பென்ஷன் மற்றும் 6 மாதங்களுக்கான அகவிலைப்படி தொகை வழங்க வேண்டும். இதில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
