/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால்-, பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
காரைக்கால்-, பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரைக்கால்-, பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரைக்கால்-, பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2025 07:10 AM
காரைக்கால் : காரைக்கால் பேரளம் அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவை தொடங்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் பாலகிருஷ்ணன்,செயலர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் புதுச்சேரி எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வ கணபதி மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:
காரைக்கால் பேரளம் அகல ரயில் பாதை திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு 40ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சரக்கு ரயில் மட்டும் இயக்கப்ப டுகிறது. காரைக்காலில் இருந்து சென்னை செல்லவேண்டுமெனில் நாகப்பட்டினம்,திருவாரூர், பேரளம் வழியாக மயிலாடுதுறை செல்ல வேண்டியுள்ளது.
இதற்காக 86 கி.மீ.,துாரத்தை கடக்க வேண்டியுள்ளது. காரைக்கால் பேரளம் பாதையில் பயணித்தால் குறுகிய நேரத்தில் மயிலாடுதுறையை அடைந்து விடமுடியும். எனவே, உடனடியாக இப்பாதையில் பயணிகள் ரயில் சேவையை தொடங் கவேண்டும்.
மேற்கு ரயில்வே நிர்வாகம், இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள வேளாங்கண்ணி கோவில் திரு விழாவுக்காக பந்த்ரா - வேளாங் கண்ணி மற்றும் பிற சிறப்பு ரயில்கள் காரைக்கால் வழியாக இயக்கப் படும்போது, காரைக்காலில் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் காரைக்காலில் இருந்து திருப்பதி, செங்கோட்டை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தியுள்ளது.