sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காலியாக உள்ள 40 இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

/

காலியாக உள்ள 40 இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

காலியாக உள்ள 40 இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

காலியாக உள்ள 40 இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்


ADDED : ஆக 25, 2025 05:31 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காலியாக உள்ள 40 மருத்துவ இடங்களை நிரப்ப புதுச்சேரி மாநில மாணவர்- பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி சென்டாக் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்தி வருகிறது. முதற்கட்ட கலந்தாய்விற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 386 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது. இதில் இந்திராகாந்தி அரசு கல்லுாரியில் 9 இடங்களும், தனியார் கல்லுாரிகளில் 30 இடங்கள் காலியாக உள்ளது.

அதன்படி சென்டாக் நிர்வாகம் அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை இணையதளத்தில் வெளியி ட வேண்டும். மருத்துவ சேர்க்கை கமிட்டி 2-ம் கட்ட கலந்தாய்விற்கான பட்டியலை வரும் 29ம் தேதி வெளியிட உள்ளது. அதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லுாரி இடங்களும், அகில இந்திய அளவில் காலியாக உள்ள இடங்களும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us