/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 15, 2025 01:59 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போது புதியதாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என, கலாம் விதைகளின் விருச்சத்தின் சமூக இயக்கத்தின் நிறுவனர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் தற்போது பரவுகின்ற வைரசின் தாக்கம் கடுமையான காய்ச்சல், தொடர் இருமல், அதீத சளி, தவிர்க்க முடியாத உடல் வலி போன்ற பல பிரச்னைகளால் புதுச்சேரி முழுதும் பரவலாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சிறு குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் வழங்குகின்ற எந்த மருந்துக்கும் நோயின் தாக்கம் குறையாததால், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சுகாதாரத்துறை விரைந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வைரசின் தன்மையை ஆய்வு செய்து அதற்கேற்ற தரமான மருந்துகளை வழங்கி, மக்களை பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.