ADDED : செப் 13, 2026 07:34 PM
பாகூர்: சேலியமேடு ஸ்ரீகோகுல கிருஷ்ணன் கோவிலில், கோலாஷ்டமியையொட்டி, உறியடி உற்சவம் நடந்தது.
பாகூர் அடுத்துள்ள சேலியமேடு கிராமத்தில் ஸ்ரீகோகுல கிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கோகுலாஷ்டமியையொட்டி நேற்று முன்தினம் உறியடி உற்சவம் நடந்தது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு விசேஷே திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு பஜனையும், அதனை தொடர்ந்து உறியடி உற்சவமும் நடந்தது. இதில், திரளான சிறுவர்கள் பங்கேற்று உறியடித்தும், சறுக்கு மரம் ஏறி விளையாடி மகிழ்ந்தனர்.
தொடந்து, வெண்ணெய் தாழி அலங்காரத்தில் கிருஷ்ணர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, யாதவ சமுதாயத்தை சேர்ந்த 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சேலியமேடு யாதவ சமாஜத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
