/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லேசர் அணுக்கரு அழுத்தம் மூலம் சிறுநீரக அறுவை சிகிச்சை
/
லேசர் அணுக்கரு அழுத்தம் மூலம் சிறுநீரக அறுவை சிகிச்சை
லேசர் அணுக்கரு அழுத்தம் மூலம் சிறுநீரக அறுவை சிகிச்சை
லேசர் அணுக்கரு அழுத்தம் மூலம் சிறுநீரக அறுவை சிகிச்சை
ADDED : நவ 22, 2024 05:32 AM

இந்திராகாந்தி மருத்துவமனை சாதனை
புதுச்சேரி: அரசு மருத்துவமனையில், புரோஸ்டேட் ேஹால்மியம் லேசர் அணுக்கரு அழுத்தம் மூலம், நோயாளிக்கு மருத்துவ குழுவினர், சிறுநீரக அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு, 67 வயதுடைய ஆண் ஒருவர், சிறுசீரக அடைப்பு ஏற்பட்டு அதிக வலியுடன் வந்தார். அவரை பரிசோனை செய்த மருத்துவர்கள், பெரிய அளவில், புரோஸ்டேடிக் ைஹப்பர் பிளேசியா தொற்று பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர்.
அதையடுத்து, சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுதாகர் தலைமையில், மருத்துவ குழுவினர், நோயாளிக்கு, உடனடியாக அதி நவீன தொழில்நுட்ப கருவியை பயன்படுத்தி, புரோஸ்டேட், ேஹால்மியம் லேசர் அணுக்கரு, அழுத்தம் மூலம், அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இதுகுறித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறுகையில், 'மருத்துவமனையில், சிறுநீரக பாதையில் அடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு, முதன் முறையாக, குறைந்த நேரத்தில், லேசர் அணுக்கரு அழுத்தம் மூலம், பாதிப்பு இல்லாமல், அறுவை சிகிச்சை செய்துள்ளோம். நோயாளி வலியில்லாமல், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்' என்றார்.