/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ., பயன்படுத்தினால் இனி வேலை வசப்படும்; கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி அட்வைஸ்
/
ஏ.ஐ., பயன்படுத்தினால் இனி வேலை வசப்படும்; கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி அட்வைஸ்
ஏ.ஐ., பயன்படுத்தினால் இனி வேலை வசப்படும்; கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி அட்வைஸ்
ஏ.ஐ., பயன்படுத்தினால் இனி வேலை வசப்படும்; கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி அட்வைஸ்
ADDED : மார் 31, 2025 05:33 AM

புதுச்சேரி : 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:
இந்தியாவில், ஏ.ஐ., படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு ஏ.ஐ., டூல்ஸ் கூட உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை யாரும் யோசித்து பார்ப்பதில்லை. இதனால் ஐ.ஐ.டி., மும்பை, டில்லி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்களில் இப்படிப்பை யூ.ஜி., அளவில் ஆரம்பிக்கவே இல்லை.
ஏ.ஐ., பெரிய அளவில் அனைத்து துறைகளிலும் ஊடுறுவி உள்ளது. இதற்காக தனியாக ஏ.ஐ., படிக்க வேண்டும் என்பதில்லை. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை எப்படி, எங்கு பயன்படுத்த போகிறோம் என்பதுதான் முக்கியம். 2001ல் எது படித்தாலும் கம்ப்யூட்டர் பயன்படுத்த பழக்கிக்கொள் என்று கூறப்பட்டது. அதுபோல் இப்போது எது படித்தாலும், ஏ.ஐ., பயன்படுத்த கற்றுக்கொள் என்பதே என்னுடைய அட்வைஸ்.
ஏ.ஐ., ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் தான் இனி வேலை வசப்படும். தற்போது உலக அளவில் பேசப்படும் ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் மிக குறைவு தான். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை தாண்டி தற்போது ஓ.ஐ., எனப்படும் ஆர்க்கனைஸ்டு இன்டலிஜென்ட் சகாத் துவங்கிவிட்டது. இதுபோல் டேட்டா சயின்ஸ் விஸ்வரூப வளர்ச்சியை தொட்டுவிட்டது.
தற்போது சிந்தட்டிக் டேட்டா சயின்ஸ் ஆக முன்னேறிவிட்டது. தற்போதைய கோடிங்கில் 80 சதவீதம் மாற்றம் வரப்போகிறது. 70 சதவீதம் வேலை வாய்ப்புகள் டிஜிட்டல் மயமாக போகின்றன. இவ்வகையில், தற்போது நம்மிடையே உள்ள 72 சதவீதம் தொழில்நுட்ப திறன்கள் வரும் 2030ல் காலாவதியாகிவிடும். விஸ்வரூப தொழில்நுட்ப புரட்சியை நாம் சந்திக்க உள்ளோம்.
இன்று இருக்கும் தொழில்நுட்பம், நாளை இருக்காது. ஏ.ஐ., தொழில்நுட்பமும் மாறிபோய்விடும். எவ்வகை தொழில் நுட்பங்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கும் என்பதை அறிந்து படிப்புகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட உள்ளது. அதுபோல் ஹெல்த் கேர் வெர்ஜூவல் ரியாலிட்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது நமது இதயம் துடிப்பதை நாமே அறியலாம், மரணம் வந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர வைப்பது தான் இந்த வெர்ஜூவல் ரியாலிட்டி தொழில் நுட்பம்.
அதுபோல் கியூ.ஆர்., கோடுக்கு பதில் ஐ.ஆர்., கோடு தொழில்நுட்பத்துக்கு வந்துவிட்டோம். அதாவது ஏ.டி.எம்., உள்ளிட்ட பண வர்த்தக கார்டுகள் இல்லாமல் தொடுதல் உணர்வு மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்கியூரிட்டி துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது.
பொறியியலில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.