ஊசுடு (தனி) தொகுதி காங்.,வேட்பாளர் ராமநாதபுரத்தில் ஓட்டு சேகரிப்பு
ஊசுடு (தனி) தொகுதி காங்.,வேட்பாளர் ராமநாதபுரத்தில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 01, 2026 07:47 PM

வில்லியனுார்: ஊசுடு(தனி) தொகுதியில் காங்., வேட்பாளர் கார்த்திகேயன், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
ஊசுடு (தனி) தொகுதியில் இண்டி கூட்டணியில் காங்., சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். கடந்த இரு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போதிலும், தொகுதியில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வருவதால், மக்கள் மத்தியில் பெரும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக தொகுதியில் தீவிரமாக காங்., கட்சி சார்பில் களப்பணியாற்றி தொகுதியில் பல்வேறு கிராமங்களில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வந்தார்.
நேற்று ராமநாதபுரத்தில் ஓட்டு சேகரித்த வேட்பாளர் கார்த்திகேயன் பேசியதாவது: இத்தொகுதியில் எம்.எல்.ஏ.,வாகவும், குடிசை மாற்று வாரிய தலைவராகவும் இருந்தபோது தொகுதியில் இருந்த அனைத்து குடிசை வீடுகளையும், கல் வீடுகளாக மாற்றி கொடுத்தேன், மேலும் தொகுதி முழுவதும் சாலை, குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். மீண்டும் வெற்றி பெற்றால் ஊசுடு தொகுதியில் மேலும் பல வளர்ச்சி பணிகளை செய்து கொடுப்பேன் என்றார்.
