/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளம்பர பேனர்களை முறைப்படுத்த உழவர்கரை நகராட்சி அறிவிப்பு
/
விளம்பர பேனர்களை முறைப்படுத்த உழவர்கரை நகராட்சி அறிவிப்பு
விளம்பர பேனர்களை முறைப்படுத்த உழவர்கரை நகராட்சி அறிவிப்பு
விளம்பர பேனர்களை முறைப்படுத்த உழவர்கரை நகராட்சி அறிவிப்பு
ADDED : நவ 02, 2024 07:05 AM
புதுச்சேரி,: விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகளை நெறிமுறை படுத்த உழவர்கரை நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி சார்பில் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்களை நெறிமுறை படுத்துவதற்காக 'உழவர்கரை நகராட்சியின் வரைவு விளம்பர துணை விதிகள்' பொது மக்களின் ஆட்சேபனை மற்றும் கருத்துக்காக வெளியிடப்பட்டது.
அதன் மூலம் பெறப்பட்ட கருத்துகளை கொண்டு, நகராட்சிக்கு இணையான பிற மாநிலங்களின் விளம்பர கட்டணத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்து, 'உழவர்கரை நகராட்சி வெளிப்புற ஊடக சாதனம் வரைவு துணை விதிகள்' என்ற பெயரில் மீண்டும் பொதுமக்களின் கருத்துக்கு வெளியிடப்படுகிறது.
அதில், விளம்பர நிறுவனங்கள் சுய மற்றும் 3ம் நபரின் விளம்பர பதாகைகள் வைக்க ஆண்டிற்கு சதுர மீட்டருக்கு ஒளிரா விளம்பரங்களுக்கு ரூ.2,000, ஒளிரும் விளம்பரங்களுக்கு ரூ.2200 அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத பேனர்கள் கட்டப்படுவதை தடுக்க நகராட்சி வழங்கிய அனுமதியை விளம்பரத்தில் இணைக்க ஒரு துணை பிரிவு சேர்க்கப்பட்டது.
எந்த ஒரு அச்சகமும் நகராட்சியின் அனுமதி சீட்டை பெற்ற பிறகே ் விளம்பரங்களை அச்சிட வேண்டும். தவறும் பட்சத்தில் அச்சகத்தின் உரிமத்தை ரத்து செய்ய சப் கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும்.
நகராட்சி அனுமதி பெற்று வைக்கும் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்கள் 3ம் நபர் காப்பீடு திட்டத்தை விளம்பர நிறுவனங்கள் கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும்.
ஆணையர் முடிவிற்கு விளம்பர நிறுவனங்கள் பாதிக்கப் பட்டால், அந்நிறுவனங்கள் தனி அதிகாரி, இயக்குனர், ஊள்ளாட்சித்துறை, புதுச்சேரி அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.
பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனை மற்றும் கருத்துகளை பெற நகராட்சியின் ஜவஹர் நகர், தலைமை அலுவலகம், பழைய மேரி உதவி பொறியாளர் அலுவலகம், வரி வசூல் மையம், வி.வி.பி.நகர் ஆகிய இடங்களிலும் புதிய விதிகள் வைக்கப்படுகிறது.
மேலும், நகராட்சியின் இணையத்தளத்தில் (www.oulmun.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆட்சேபனை இருப்பின் 15 நாளில் ஆணையர், உழவர்கரை நகராட்சி, ஜவஹர் நகர், புதுச்சேரி-5, என்ற முகவரியில் எழுத்து பூர்வமாகவோ அல்லது (om.pon@nic.in, om@py.gov.in) என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.