உழவர்கரை சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பு
உழவர்கரை சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 29, 2026 04:06 AM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
உழவர்கரை சட்டசபை தொகுதியில் சமூக சேவகர் சரவணன் கடந்த 20 ஆண்டுகளாக தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.
இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் என்பதால், பா.ஜ., கட்சியில் இணைந்து பா.ஜ., துணை தலைவராக இருந்து வரும் சரவணன், பா.ஜ., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தார்.
இந்த முறை அவருக்கு சீட்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில் மக்கள் செல்வாக்கோடு சுயேச்சை வேட்பாளராக களம் கானும் சரவணனுக்கு, குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று உழவர்கரை தொகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஜவகர் நகர், இந்து நகர், பாவேந்தர் நகர், டீச்சர்ஸ் காலனி, தட்டக்குட்டை பகுதிகளில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து ஜவகர் நகர் நல்லாட்டு முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்ட அவர், சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து உழவர்கரை காளிகோவில் பகுதியில் நுாற்றுக்கணக்கான பெண்கள், பொதுமக்களுடன் அப்பகுதியில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
