sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரும்பார்த்தபுரம் 'பைபாசில்' குப்பை கொட்டுவதை படம் பிடித்து அனுப்பினால் ரூ. 2 ஆயிரம் சன்மானம் உழவர்கரை நகராட்சி அதிரடி அறிவிப்பு

/

அரும்பார்த்தபுரம் 'பைபாசில்' குப்பை கொட்டுவதை படம் பிடித்து அனுப்பினால் ரூ. 2 ஆயிரம் சன்மானம் உழவர்கரை நகராட்சி அதிரடி அறிவிப்பு

அரும்பார்த்தபுரம் 'பைபாசில்' குப்பை கொட்டுவதை படம் பிடித்து அனுப்பினால் ரூ. 2 ஆயிரம் சன்மானம் உழவர்கரை நகராட்சி அதிரடி அறிவிப்பு

அரும்பார்த்தபுரம் 'பைபாசில்' குப்பை கொட்டுவதை படம் பிடித்து அனுப்பினால் ரூ. 2 ஆயிரம் சன்மானம் உழவர்கரை நகராட்சி அதிரடி அறிவிப்பு


ADDED : நவ 10, 2025 03:30 AM

Google News

ADDED : நவ 10, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பை கொட்டும் கும்பலை பிடிக்க அனைத்து துறைகளும் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளன.

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையின் இருபுறமும் குப்பைகளை கொட்டி அட்டூழியம் செய்து வந்தனர்.

இது குறித்து நேற்றுமுன்தினம் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இது குறித்து கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, துறை செயலர்கள் கவனத்திற்கு சென்ற நிலையில் அனைத்து அரசு துறைகளும் அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள் நேற்று முழுதும் புறவழிச்சாலையில் தீவிர துாய்மை பணியில் ஈடுபட்டன.

புறவழிச்சாலையின் இருபுறம் கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குப்பைகள், மலைபோல் குவிந்திருந்த கட்டட கட்டுமான கழிவுகள் அனைத்து அகற்றப்பட்டன. அவை,லாரிகளில் மறு சூழற்சிக்காக கொண்டு செல்லப்பட்டன.

இதனிடையே, அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பை கொட்டுவதை முற்றிலும் தடுக்க உத்தரவிட்டுள்ள உழவர்கரை நகராட்சி, இதற்காக சன்மான திட்டத்தையும் அறிவித்துள்ளது.

இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியதாவது:

அரும்பார்த்தபுறம் புறவழிச்சாலையில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதை தொடர்ந்து, உள்ளாட்சி துறை உத்தரவின்பேரில் உழவர்கரை நகராட்சி துாய்மை பணியில் ஈடுபட்டது.

கிரீன் வாரியர் நிறுவனம் மூலம் குப்பைகள் அகற்றி, கட்டட கழிவுகள் சமன் செய்யப்பட்டது. அப்பகுதியில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அப் பகுதியில் வாகனங்கள் மூலம் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் வந்துள்ளதால் உடனடியாக அவை சுத்தம் செய்யப்பட்டது.

குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவும் அபராதம் விதிக்கவும் நகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பை, கழிவுகளை கொட்டும் வாகனங்களின் விவரங்களை புகைப்படம் எடுத்து நகராட்சியின் 75981-71674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என்றார்.

போலீசில் புகார் உள்ளாட்சி அமைப்புகள் ஒருபக்கம் தீவிர துாய்மை பணி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்க, பொதுப்பணித் துறையும் தன் பங்கிற்கு நள்ளிரவு ரோந்துக்கு உத்தரவிட்டுள்ளது. குப்பை கொட்டும் வாகனங்களை கையும் களவுமாக பிடித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக போலீசாரும் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர புறவழிச்சாலையில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணித் துறை மூலம் 10 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கவும் தயாராகி வருகிறது.






      Dinamalar
      Follow us