sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 199 இறைச்சி கடைகளுக்கு அபராதம் உழவர்கரை நகராட்சி அதிரடி

/

 199 இறைச்சி கடைகளுக்கு அபராதம் உழவர்கரை நகராட்சி அதிரடி

 199 இறைச்சி கடைகளுக்கு அபராதம் உழவர்கரை நகராட்சி அதிரடி

 199 இறைச்சி கடைகளுக்கு அபராதம் உழவர்கரை நகராட்சி அதிரடி


ADDED : ஜன 17, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி பகுதியில் திருவள்ளுவர் தினத்தையொட்டி, தடையை மீறி செயல்பட்ட 199 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும் இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிச வகைகளின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அன்றைய தினத்தில் தடையை மீறி செயல்படும் கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களுக்கு சீல் வைப்பதுடன், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின்பேரில், இறைச்சி கடைகளை கண்காணிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இளநிலை பொறியாளர் சேகர், ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, கதிர்காமம், உழவர்கரை உள்ளிட்ட தொகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதில், தடையை மீறி செயல்பட்ட 199 கடைகளுக்கு மொத்தம் 62,450 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகபட்சமாக இந்திரா நகர் தொகுதியில் 33 கடைகளுக்கு 16,500 ரூபாய், கதிர்காமம் தொகுதியில் 47 கடைகளுக்கு 13,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us