தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சமூக பாதுகாப்பு வாரியத்தில் காலி இடங்களை நிரப்ப வேண்டும்

சமூக பாதுகாப்பு வாரியத்தில் காலி இடங்களை நிரப்ப வேண்டும்

சமூக பாதுகாப்பு வாரியத்தில் காலி இடங்களை நிரப்ப வேண்டும்


UPDATED : அக் 29, 2026 11:05 PM

ADDED : அக் 29, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:05 PM ADDED : அக் 29, 2026 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சமூக பாதுகாப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அரசு சார்பில், சமூக பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, நலத்திட்ட உதவிகள் வழகப்பட்டு வருகிறது. இதில், தற்போது 27 ஆயிரத்து 314 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மை தன்மையை அறிய களப்பயணம் சென்று அவர்கள் உண்மையான பயனாளர்களா என சரிபார்க்கப்பட்டு, உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். இதற்காக இரண்டு ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன.

தற்போது இந்த இரண்டு இடங்களும் காலியாக உள்ளதால், தொழிலாளர் அதிகாரி கூடுதலாக களப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இங்கு மொத்தம் 21 நபர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 5 பேர்தான் பணியாற்றி வருகின்றனர்.

இதனால், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் கிடைக்க தாமதமாகிறது. எனவே சமூக பாதுகாப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us