/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர்பாசன பொறியாளர் பணியிடங்கள் காலி விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
/
நீர்பாசன பொறியாளர் பணியிடங்கள் காலி விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
நீர்பாசன பொறியாளர் பணியிடங்கள் காலி விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
நீர்பாசன பொறியாளர் பணியிடங்கள் காலி விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
ADDED : நவ 20, 2024 04:52 AM
பாகூர்: பாகூர் கோட்ட பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அலுவலகத்தில், பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு, பொது மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாகூர் பங்களா வீதியில், புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவின் கோட்ட அலுவலம் இயங்கி வருகிறது. இங்கு, ஒரு உதவி பொறியாளரும், நான்கு இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பாகூர் பகுதியில் உள்ள ஆறு, ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் போக்கு மற்றும் வடிகால் வாய்க்கால்களை பராமரிப்பது இவர்களின் முக்கிய பணியாகும்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பணியாற்றி வந்த உதவி பொறியாளரும், இரண்டு இளநிலை பொறியாளர்களும் பணியிட மாறுதலில் சென்று விட்டார்.
இதுவரை காலியாக உள்ள பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
உதவி பொறியாளர் பணியிடம் மட்டும் கூடுதல் பொறுப்பாக, வேறு ஒரு உதவி பொறியாளரிடம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பு என்பதால், அவராலும் சரிவர பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், பாகூர் பகுதியில் ஏரி, குளங்கள், வாய்க்கால் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் நிலை இருந்து வருகிறது.
மற்றொரு புறம் வடிகால் வாய்க்கால் பராமரிப்பு சரிவர இல்லாததால், மழை நீர் வெளியேற வழியின்றி வயல்வெளி மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், விவசாயிகள் மட்டுமின்றி பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பாகூரில் உள்ள பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்டத்திற்கு, நிரந்தரமாக உதவி பொறியாளர், மற்றும் இளநிலை பொறியாளர்களை நியமணம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.