தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்

ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்

ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்


ADDED : ஜூன் 08, 2025 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 10:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவப் பெருவிழாவையொட்டி, தேர் திருவிழா நடந்தது.

நெட்டப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பர்வதவர்தினி ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் வரும் 12ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

6ம் தேதி இரவு பர்வதவர்த்தினி - ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us