
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வன்னிய பெருமாள் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதலியார்பேட்டை, வன்னிய பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம் நடந்தது. இக்கோவிலில் கும்பாபிேஷகத்தையொட்டி, பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பரமபத வாசல் சேவை நடைபெறவில்லை.
இந்நிலையில் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்த கோவிலில் சம்பத் எம்.எல்.ஏ., கோவில் தனி அதிகாரி வெங்கடேசன், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்களுடன் தரிசனம் செய்தனர்.

