sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சேலியமேட்டில் இன்று வைஷ்ணவ மாநாடு

/

சேலியமேட்டில் இன்று வைஷ்ணவ மாநாடு

சேலியமேட்டில் இன்று வைஷ்ணவ மாநாடு

சேலியமேட்டில் இன்று வைஷ்ணவ மாநாடு


ADDED : ஆக 30, 2025 11:50 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்,: பாகூர் அடுத்த சேலியமேடு ஆஞ்ஜநேயர் கோவிலில், மதுரகவி ஆழ்வார் சபை சார்பில் இன்று 31ம் ஆண்டுவைஷ்ணவ மாநாடு நடக்கிறது.

அதையொட்டி, காலை 7:00 மணிக்கு பஜனையுடன் கோகுல கண்ணன் வீதியுலா, 8:00 மணிக்கு, கவுரவ தலைவர் ஜானகிராமன் கருடக்கொடியேற்றி வைக்கிறார். 8:30 மணிக்கு ஆண்டாள் பஜனை குழுவினரின் திருமால் துதி நடக்கிறது. செயலாளர் சீனுவாச ராமானுஜதாசன் வரவேற்கிறார்.

துணை தலைவர் ரவி துவக்கவுரையாற்றுகிறார்.பொருளாளர்கள் சின்னராசு, லட்சுமிநாராயணன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசிக்கின்றனர். விழுப்புரம் ஸ்ரீமத் நம்மாழ்வார் வைணவ சபை தலைவர் லட்சுமண ராமனுஜ சுவாமிகள் தலைமையுரையாற்றுகிறார்.

காலை 9:15 மணிக்கு திருக்கோவிலுார் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடாதிபதி ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனம் நடக்கிறது.

இம்மாநாட்டில், திண்டிவனம் வெங்கடேச ராமானுஜ தேசிக தாசர் சுவாமிகள் 'ஆதிபிரான்' என்ற தலைப்பிலும், திருவல்லிக்கேணி கிடாம்பி நாராயணன் சுவாமிகள் 'கண்ணிநுண் சிறுதாம்பு' என்ற தலைப்பிலும்,காஞ்சிபுரம் அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் 'ஆச்சாரிய நிஷ்டை' என்ற தலைப்பிலும், தென்திருப்பேரை அரவிந்த லோச்சனன் சுவாமிகள் மேலையார் செய்வனகள் என்ற தலைப்பிலும், மதுராந்தகம் ரவி வீரபட்டாச்சார்யார் சுவாமிகள் 'காலையும் -மாலையும்' என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.

தலைவர் வீரா ஆதிநாராயணன் ராமானுஜம் நன்றி கூறுகிறார்.






      Dinamalar
      Follow us