/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதா நவராத்திரி பூஜையில் வைஷ்ணவி அலங்காரம்
/
சாரதா நவராத்திரி பூஜையில் வைஷ்ணவி அலங்காரம்
ADDED : செப் 24, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சாரதா நவராத்திரி சத சண்டி மகா ேஹாமத்தில் அம்மன் வைஷ்ணவி சொரூபத்தில் அருள்பாலித்தார்.
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சத சண்டி மகா ேஹாமம் நேற்று முன்தினம் துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்று சிவப்பு புடவையில் வைஷ்ணவி சொரூபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அனைத்து பூஜைகளும் சாஸ்திரப்படி நடைபெற்றது.
பூர்ணாஹுதி, தீபாராதனை மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்றதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.