/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியின் அசாதாரண சூழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் கட்சியினருக்கு வைத்திலிங்கம் அறிவுறுத்தல்

ADDED : மார் 11, 2024 04:22 AM
புதுச்சேரி, : புதுச்சேரியின் அசாதாரண சூழலையும், பா.ஜ., - என்.ஆர்.காங்., அரசின் மக்கள் விரோதப்போக்கையும்,மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என,கட்சியினரிடம்,வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் களை கட்ட துவங்கி உள்ளன.காங்., சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில், ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
இதில், இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் அய்யப்பன், சிவா, ரவி, தொகுதி நிர்வாகிகள் வெங்கடேசன், ஜம்புலிங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், 'தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த, 2019ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, கூடுதலாக ஓட்டுகளை பெற வேண்டும். தொண்டர்களுக்காக, தலைவர்களின் வீட்டு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்' என்றார்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பேசுகையில், 'புதுச்சேரியில் நிகழும் அசாதாரண சூழ்நிலையை, பா.ஜ., - என்.ஆர். காங்., அரசின் மக்கள் விரோத போக்கை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ராகுலை பிரதமர் ஆக்குவதற்கு பாடுபட வேண்டும்' என்றார்.