/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேரிடர் மேலாண்மை நிதியை புதுச்சேரிக்கு உடன் வழங்கவேண்டும் லோக்சபாவில் வைத்திலிங்கம் எம்.பி.,வலியுறுத்தல்

ADDED : டிச 13, 2024 05:56 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு பேரிடர் மேலாண்மை நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி., பேசினார்.
லோக்சபாவில் பேரிடர் மேலாண்மை (திருத்த மசோதா) 2024 மீதான விவாதத்தின் போது எம்.பி., வைத்திலிங்கம் பேசியதாவது:
புதுச்சேரியில் கடந்த வாரம் வீசிய பெஞ்சல் புயல் மற்றும் கனமழை, புதுச்சேரி மற்றும் தமிழகம் சந்தித்த பேரழிவு ஆகும். தமிழகத்தில் 50 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டது. புதுச்சேரி முதல்வர் ரூ. 650 கோடி நிவாரணம் கேட்டுள்ளார். இவற்றை உடன் வழங்கவேண்டும்.
இந்த சட்டக் குழுவில் நாங்கள் கேட்பது என்னவென்றால் நீங்கள் மத்திய குழுவினை ஆய்வு செய்ய பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்புகின்றீர்கள். ஆய்வுக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து வெளியில் தெரிவதில்லை.
அந்த மத்திய குழு அறிக்கைகளை மாநில அரசிற்கு தெரிவிப்பதில்லை. மத்திய குழு வந்து சென்ற ஒரு வாரத்திற்குள் மத்திய ஆய்வு குழுவின் அறிக்கையை மாநில அரசிற்கு தெரிவிக்க வேண்டும்.
அப்படி தெரிவித்தால் தான் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். ஆகவே சட்டம் முன் வரைவில் அதனை இணைக்க வேண்டும்.
சட்ட வரைவு எதிர்காலத்தில் வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா நிலச்சரிவு ஏற்பட்டு கிராமங்கள் அடித்து சென்றனர்.
இதற்காக மத்திய அரசு அறிக்கையும் தரவில்லை, நிதியும் தரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் நிவாரண தொகையை வழங்க சட்டம் முன் வரைவில் இணைக்கப்பட வேண்டும் என்றார்.