/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
/
அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
ADDED : மார் 08, 2024 06:47 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கையும், மேற்கொள்ளாத அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் என, வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
புதுச்சேரி சிறுமி படுகொலை, மக்களின் உணர்வுகளை உலுக்கியிருக்கிறது. மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்திருக்கின்றனர். கஞ்சா வியாபாரம் இங்கு முழுமையாக வேரூன்றி இருக்கிறது.
காவல்துறை அமைச்சரின் துணையோடு, கஞ்சா வியாபாரம் நடக்கிறது. அந்த அமைச்சரின் நண்பர்களே, இந்த காரியத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த அரசு கண்ணை மூடிக்கொண்டு, கஞ்சா வியாபாரத்திற்கு, முழு துணையாக இருக்கிறது. ஆனால், கவர்னர் தமிழிசை, போதைப்பொருட்களை குறைத்திருக்கிறோம் என்று சொல்கிறார். அது முழுமையான பொய்.
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், சொல்லக்கூடிய பதில் என்று தான் சொல்ல வேண்டும். இது சம்மந்தமாக, அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் போராட்டம் நடத்துகிறோம். அதற்கு பிறகாவது, அமைச்சர் நமச்சிவாயம் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.