/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மீனவர்களை சந்திக்க வேண்டும் முதல்வருக்கு வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை

ADDED : பிப் 21, 2025 04:39 AM
புதுச்சேரி: இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேச வேண்டும் என, வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த மாதம் 27ம் தேதி காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதியை சார்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்து மீறி தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்தனர். அவர்கள், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களை விடுவிக்க கோரி நானும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அவரும் நடவடிக்கைஎடுப்பதாக உறுதி அளித்தார்.
இதற்கிடையில், காரைக்கால் பகுதியை சார்ந்த மீனவ சமுதாயத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழகப் பகுதியிலே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அழைத்து தமிழக முதல்வர், மீனவர்களிடம் அவர்களுக்கு உண்டான அனைத்து உதவிகளை செய்வதாக உறுதியளித்து அவர்களுடைய போராட்டத்தை விலக்கிக் கொள்ள கேட்டுக் கொண்டனர்.
அதுபோல, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காரைக்கால் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களைநேரில் சந்தித்து பேச வேண்டும்.
மத்திய அரசை அணுகி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும்.இந்த இக்கட்டான தருணத்தில் காரைக்கால் பகுதியை சார்ந்த மீனவர்கள் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.