/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா
/
வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா
ADDED : நவ 01, 2025 02:03 AM

புதுச்சேரி: சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாளை அரசு சார்பில் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.
அதைனையொட்டி, கடற்கறைச் சாலை, காந்தி சிலை அருகே நடந்த விழாவில், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப் படத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து போலீஸ், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை பார்வையிட்டனர். பின்னர், கவர்னர் தலைமையில் அனைவரும் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
நிறைவாக, மாணவ - மாணவிகளின் தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தை கவர்னர் மற்றும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., சாய் சரவணன் குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, அரசு செயலர்கள் ஜெயந்த குமார் ரே, கேசவன், முகமது ஹசன் அபித், யாசின் முகமது சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

