/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வள்ளலார் பிறந்த நாள் இலவச மருத்துவ முகாம்
/
வள்ளலார் பிறந்த நாள் இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 28, 2024 04:30 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வள்ளலார் பிறந்தநாளை யொட்டி, இலவச மருத்துவ முகாமும், திருவருட்பா நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.
முதலியார்பேட்டை, சமசர சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், வள்ளலார் பிறந்தநாளையொட்டி, நாளை 29ம் தேதி காலை 10:00 மணிக்கு, இலவச பொது மருத்துவ முகாம் நடக்கிறது.
இதில் பொதுநல டாக்டர் வினோத், தோல் நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் நித்யா, மனநல ஆலோசகர் ராஜேஸ்வரி மற்றும் கண் டாக்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த முகாமில் தைராய்டு, சர்க்கரை, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, பாத எரிச்சல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, ரத்தக்கொதிப்பு மற்றும் தோல்நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் அன்றைய தினம் மதியம் துவங்கி, வரும் அக்.,3ம் தேதி வரை, திருவருட்பா ஆறு திருமுறைகள் ஓதுதல் நடக்கிறது.
தொடர்ந்து, 4,ம் தேதி காலை 7:00 மணிக்கு திரு அகவல் படித்தல் துவங்கி, சத்திய ஞானக்கொடி ஏற்றுதல், திருவருட்பா இசை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க தலைவர் கோபால கிருஷ்ணன் செய்துள்ளார்.
சத்தியா சிறப்பு பள்ளி
லயன்ஸ் கிளப் ஆப் புதுச்சேரி, ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.
இ.சி.ஆர்., சாலை, சிவாஜி சிலை அருகில் உள்ள கருவடிக்குப்பத்தில் உள்ள சத்தியா சிறப்பு பள்ளியில் இன்று இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. முகாம், காலை 9:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கின்றனர்.