/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி இன்சூரன்ஸ் சமர்ப்பித்த வேன் உரிமையாளருக்கு வலை
/
போலி இன்சூரன்ஸ் சமர்ப்பித்த வேன் உரிமையாளருக்கு வலை
போலி இன்சூரன்ஸ் சமர்ப்பித்த வேன் உரிமையாளருக்கு வலை
போலி இன்சூரன்ஸ் சமர்ப்பித்த வேன் உரிமையாளருக்கு வலை
ADDED : ஆக 08, 2025 02:08 AM
புதுச்சேரி: போலி இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ரூ. 15 லட்சம் விபத்து காப்பீடு பெற முயன்ற மினி வேன் உரிமையாளரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி,66. இவர், கடந்த 2021ம் ஆண்டு ஏப்., 9ம் தேதி தனது பேத்தி ரோஷினியுடன், புதுச்சேரியில் இருந்த வீட்டிற்கு சென்றபோது, காமராஜர் சாலையில் பின்னால் வந்த மினி வேன் மோதியது. அதில் சுந்தரமூர்த்தி, ரோஷினி இருவரும் படுகாயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சுந்தரமூர்த்தி குடும்பத்தார் ரூ.15 லட்சம் இழப்பீடு கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், மினிவேன் உரிமையாளர் கோர்ட்டில் தாக்கல் செய்த இன்சூரன்ஸ் பாலிசியை, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அது போலி என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவன துணை மேலாளர் அஜின் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிந்து, மினி வேன் உரிமையாளர் சங்கீதா மீது சந்தேகத்தின் பேரில் மோசடி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.