தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சீனியர் எஸ்.பி.,யிடம் வன்னியர் சங்கம் மனு

 சீனியர் எஸ்.பி.,யிடம் வன்னியர் சங்கம் மனு

 சீனியர் எஸ்.பி.,யிடம் வன்னியர் சங்கம் மனு


ADDED : டிச 16, 2025 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வன்னியர் சங்க தலைவர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம் அளித்த மனு விபரம்:

கூனிச்சம்பட்டைச் சேர்ந்த விநாயகம்,40. கடந்த 6ம் தேதி மணலிப்பட்டில் இருந்து பைக்கில் வந்தபோது திருக்கனுாரில் இருந்து , ஐவேலிக்கு பைக்கில் சென்ற நந்தகுமார் அவர் மீது மோதினர். அதில், படுகாயமைடைந்த இருவரையும், அவ்வழியாக வந்த ஐ.ஆர்.பி.என் போலீஸ் வீரமணி, தமிழக போலீஸ் வசந்தகுமார், பிரதீப் ஆகியோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், விநாயகம் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இந்நிலையில், விபத்தில் சிக்கிய விநாயகம் ஓட்டி வந்த பைக்கிற்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால், விபத்து வழக்கை மாற்றி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவியோர் உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர்.

எனவே, இறந்த விநாயகத்திற்கு ஆதரவாக, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய வில்லியனுார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோர் மீது துறை ரீதியான குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 4 இளைஞர்கள் மீதும் போடப்பட்டுள்ள கொலை வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us