என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு வன்னியர் சங்கம் ஆதரவு
என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு வன்னியர் சங்கம் ஆதரவு
ADDED : ஏப் 03, 2026 05:28 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு வன்னியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என வலியுறுத்தி, சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் தலைமையில் வன்னியர் சங்க மாநில தலைவர் (ராமதாஸ் அணி) நரசிம்மன், லாஸ்பேட்டை வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது, லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்துவை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என, வன்னியர் சங்கத்தினர் உறுதி அளித்தனர்.
