/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருண் குரூப்ஸ் நிறுவன இல்ல திருமண விழா
/
வருண் குரூப்ஸ் நிறுவன இல்ல திருமண விழா
ADDED : ஜன 22, 2025 08:01 AM

புதுச்சேரி : புதுச்சேரி வருண் குரூப் ஆப் கம்பெனிஸ் இல்ல திருமண விழா, ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.
புதுச்சேரி வருண் குரூப் ஆப் கம்பெனியின் உரிமை யாளர் சரவணன் சாந்தி தம்பதியின் இளைய மகள் பிரித்தா - இளம்பரிதி திருமண விழா, சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
மண மக்களை முதல்வர் ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., சி.ஐ.டி.ஏ., தலைவர் கருணாநிதி, செயலர் இளங்கோ, ராஜவேல், சதாசிவம், தமிழ்செல்வன், பாங்க் ஆப் பரோடா மண்டல மேலாளர் ரவி மற்றும் மேலாளர்கள், சென்னை குட்ஸ் டிரான்ஸ்போர்ட் சங்க தலைவர் ரவிசங்கர், பாலகிருஷ்ணன், ராஜ்குமார் அகர்வால், கார்கோவிங்ஸ் சுப்ரமணி, ஏ.எல். குழுமத்தின் உரிமையாளர்கள் லியோ மைக்கல், ஆல்பர்ட்ஜோ, ஜெயவிலாஸ் புஷ்பராஜ், பிரித்தா, கிருபாகரன் பிரகாஷ், எஸ்.டி.எஸ். குழுமத்தின் தலைவர் ரவிச்சந்திரன், மேலாளர் வெங்கடேசன் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சங்க தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள், பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள், நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவிற்கு வந்தவர்களை, மணமகளின் சகோதரி ஹர்ஷவர்தினி பாலாஜி ஆகியோர் வரவேற்று நன்றி கூறினர்.