ADDED : செப் 03, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வாசவி கிளப் சார்பில் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடந்தது.
வாசவி கோவில் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், கிளப் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் தனசேகரன், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில், ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, இலவச மருத்துவ முகாமில் பயனாளிகள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாசவி கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
