ADDED : டிச 24, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனையில் மத்திய அமைச்சரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் 78 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி வி.சி., கட்சியினர் நேற்று காலை 10:15 மணிக்கு திருபுவனை மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில், அவரது உருவ பொம்மையை எரிந்து மறியலில் ஈடுபட்டனர். தொகுதி செயலாளர் ஈழவளவன் தலைமை தாங்கினார். மருத்துவ தொண்டு மைய மாநில செயலாளர் முரளிதரன், நிர்வாகிகள் தமிழ்கணல், விஜயன், முருகன், சரவணன், மம்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக-புதுச்சேரி அமைப்புச் செயலாளர் தலையாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
மறியலில் ஈடுபட்ட 78 பேரை திருபுவனை போலீசார் கைது செய்தனர். இதனால், 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.