ADDED : டிச 24, 2024 05:42 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஆரோபாரதி, அரவிந்தோ சொசைட்டி சார்பில், 8வது சித்தர் தினத்தை முன்னிட்டு, 'ரிஷி அகஸ்தியர், அரவிந்தர் மற்றும் வேத பாரம்பரியம்' சர்வதேச மாநாடு நடந்தது.
அரவிந்தோ சொசைட்டியின் தலைவர் பிரதீப் நரங் தலைமை தாங்கினார். அரவிந்தோ சொசைட்டியின் செயலாளர் கிஷோர் குமார் திரிபாதி, வேதபுரி, அதன் ஆசரமம், ரிஷி அகஸ்தியர் மற்றும் அரவிந்தருடன் தொடர்புடைய முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
இணை இயக்குனர் சாரு திரிபாதி'வேதபுரி, ரிஷி அகஸ்த்யர்,அரவிந்தர் மற்றும் புதுச்சேரியின் வேத பாரம்பரியம்'எனும் திட்டத்தின் குறும்பட அறிக்கையை வழங்கினார். டாக்டர் அஜித் சாப்னிஸ்,ரிஷி அகஸ்தியரின் தென் இந்தியாவுக்கான முக்கிய பங்களிப்புகள் குறித்து பேசினார்.
ஆரோவில் பவுண்டேஷன் துணை செயலாளர் ஸ்வர்ணம்பிகா, பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு, குஜராத் ஆரோ பல்கலைக்கழகத்தின் நிறுவன தலைவர் ராமா, சித்தஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் அமைப்புத் தலைவர் முத்துக்குமார், குஜராத் சிந்து பல்கலைக்கழகத்தின் தலைவர் நாகேஷ் பண்டாரி ஆகியோர் வேதம் மற்றும் சித்த மரபுகள் குறித்து பேசினர்.
அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள், புதுச்சேரி வேத வித்யா கேந்திராவின் பீயுஷ் ஆர்யா, டாக்டர் சுந்தர் முருகன், பேராசிரியர் கிருஷ்ண மோகன் கோத்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.