ADDED : மார் 09, 2026 04:15 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, வீரமங்கை தற்காப்பு கலை சாகச விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., சுருதி தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ண பங்கேற்று தற்காப்பு கலை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், வீரமங்கை பயிற்சி பெற்ற மகளிர் போலீசார் தற்காப்பு கலை சாகசங்களை செயல் விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் பார்வையிட்டனர்.
