சுனாமி எச்சரிக்கை தந்த வீராம்பட்டினம் தெப்பக்குளம்
சுனாமி எச்சரிக்கை தந்த வீராம்பட்டினம் தெப்பக்குளம்
ADDED : ஆக 13, 2026 04:11 PM
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வழக்கம் போல் வீராம்பட்டினம் இளைஞர்கள், மீனவர்கள் தங்கள் தொழிலில் மூழ்கியிருந்தனர். காலை 7:00 மணியளவில் செங்கழுநீரம்மன் கோவிலை ஒட்டியுள்ள தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் கொதித்து பொங்குவதாக தகவல் காட்டுத்தீயாக பரவியது. உடனடியாக அப்பகுதி மக்கள் தேவஸ்தான தெப்பக்குளத்தை நோக்கி ஓடினர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் உறைய வைத்தது.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்தால் எப்படி கொப்பளித்து பொங்குமோ, அதேபோலத் தெப்பக்குளத்து நீர் கொதித்துக் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
அனைவரும் அந்த அதிசயத்தைக் கண்டு வியந்து நின்ற அதே கணத்தில் ஆர்ப்பரித்து வந்தது அந்த ஆழிபேரலையாக எழுந்த சுனாமி. கடற்கரையில் கிடந்த கட்டுமரங்களையும் வலைகளையும் அந்தப் பேரலை சுருட்டி இழுத்துச் சென்றது. ஆனால், கரையில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும், வலைகளைச் சீரமைத்துக் கொண்டிருந்த பெரியவர்களும் அம்மாள் காட்டிய அந்த அதிசயத்தால் தெப்பக்குளத்திற்குச் சென்றிருந்ததால் உயிர் தப்பினர்.
ஒருவேளை தெப்பக்குளத்து நீர் கொப்பளித்துக் காட்டிய அந்த அறிகுறி மட்டும் இல்லையென்றால், அத்தனை உயிர்களும் ஆழிப்பேரலைக்கு இரையாகியிருக்கும். அம்மன் அற்புத சக்தியால் அனைவரையும் தெப்பக்குளத்தை நோக்கி வரவழைத்து, சுனாமியிலிருந்து திசைதிருப்பி உயிர்களைக் காப்பாற்றிவிட்டாள் என்று கிராம மக்கள் இன்றவும் மெய்சிலிர்க்கப் பேசி வருகின்றனர்.
