/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புயல், மழை எதிரொலி காய்கறிகள் விலை உயர்வு
/
புயல், மழை எதிரொலி காய்கறிகள் விலை உயர்வு
ADDED : டிச 04, 2024 05:37 AM

புதுச்சேரி: புயல் கனமழை காரணமாக புதுச்சேரியில் அத்தியவாசிய காய்கறிகளின் விலை உயர்ந்தது.
புதுச்சேரிக்கு தேவையான காய்கறிகள் திருச்சி, ஓசூர், பெங்களூரு, சென்னை மார்க்கெட் பகுதிகளில் இருந்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால், காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, புதுச்சேரிக்கான காய்கறிகள் வரத்து குறைந்தது.
இதன் எதிரொலியாக புயல் கனமழைக்கு முன் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கும், ரூ. 40, 50, 60க்கு விற்கப்பட்ட வெங்காயம் ரூ. 60, 70, 80க்கும் விற்பனையானது. கத்திரிகாய் 50ல் இருந்து 80 ரூபாய்க்கும், கேரட் 70ல் இருந்து 100க்கும், பீன்ஸ் 60ல் இருந்து 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், அனைத்து காய்கறிகளின் விலைகளும் கிலோவிற்கு சராசரியாக ரூ.20 முதல் 25 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்கள் சிரமப்பட்டனர்.