தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகன பேன்சி எண்கள் 16ம் தேதி ஏலம்

வாகன பேன்சி எண்கள் 16ம் தேதி ஏலம்

வாகன பேன்சி எண்கள் 16ம் தேதி ஏலம்


ADDED : அக் 11, 2025 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : போக்குவரத்துத் துறையில் வாகன பேன்சி எண்களுக்கான ஏலம் வரும் 16ம் தேதி நடக்கிறது.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்து துறையின் பிஒய்-05-ஏபி (உழவர்கரை) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் வரும் 16ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 வரை ஏலம் விடப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயர் மற்றும் கடவு சொல்லை, https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் ''நியூ பப்ளிக் யூசர்'' மூலமாக வரும் 15ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்தவர்கள், தங்களுக்கு தேவையான எண்களை தேர்வு செய்து, அதற்குண்டான அடிப்படை தொகையை செலுத்தி, ஏலத்தில் பங்கேற்கலாம்.

இந்த மின்னணு ஏலம் முறையில், பங்கு பெற விரும்புவோர், அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை https://transport.py.gov.in என்ற இணைய தள முகவரியில் பார்த்து, பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத் தொகையின் விவரம், இ.எம்.டி., யின் விபரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இதர விபரங்கள், போக்குவரத்துத் துறை அலுவலக தொலைபேசி எண் 0413 - 2280170 மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட வாகனம் அந்த எண்ணை முன்பதிவு செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்ய தவறினால், முன்பதிவு செயலிழந்துவிடும். அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் அவரது உரிமையை இழந்துவிடும்.

இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்கப் படமட்டாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us