ADDED : பிப் 06, 2025 07:08 AM

புதுச்சேரி; திருப்பரங்குன்றம் மலை காக்க காலாப்பட்டில் வேல் யாத்திரை நடந்தது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திழ்வது திருப்பரங்குன்றம். இந்த மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. தர்காவில் உயிர்பலி கொடுக்க போலீஸ் தடை விதித்துள்ளனர். இதனை கண்டித்து முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டன.
இதனை தொடர்ந்து மலையை காக்க நேற்று திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கு சொந்தம் என்ற முழக்கத்துடன், புதுச்சேரி காலாப்பட்டில் வேல் யாத்திரை நடந்தது. பெரிய காலாப்பட்டு பஞ்சாயத்தார் கண்ணன், கிராம பிரமுகர்கள் பச்சையப்பன், மூர்த்தி, ஜெயக்குமார் மற்றும் இந்து முன்னணியினரும் கலந்து கொண்டனர்.
பிள்ளைச்சாவடியில் துவங்கிய வேல் யாத்திரை சின்ன காலாப்பட்டு வழியாக சென்று பாலமுருகன் கோவிலை அடைந்தது. அங்கு முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.