தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேல்முருகன் கட்சி நிர்வாகி பட்டப்பகலில் வெட்டி கொலை

வேல்முருகன் கட்சி நிர்வாகி பட்டப்பகலில் வெட்டி கொலை

வேல்முருகன் கட்சி நிர்வாகி பட்டப்பகலில் வெட்டி கொலை


ADDED : ஜூலை 05, 2025 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 02:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செம்பனார்கோவில்:தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலம், திருநள்ளாரை சேர்ந்தவர் மணிமாறன், 34; வேல்முருகன் நடத்தும் த.வா.க.,வின் காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர். இவருக்கும், உறவினரான பா.ம.க., மாவட்ட செயலர் தேவமணிக்கும் இடப் பிரச்னை இருந்தது. இதில், தேவமணி 2021 அக்., 22ல் வெட்டி கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில், முதல் குற்றவாளியான மணிமாறன், ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர், நேற்று, மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அக்கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்றுவிட்டு, காரில் திருநள்ளாறு புறப்பட்டார். செம்பனார்கோவில் காலஹஸ்திநாதபுரம் தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, எதிரே இரு கார்களில் வந்த மர்ம கும்பல், காரை வழிமறித்து மணிமாறனை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியது.

தேவமணி கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us