ADDED : செப் 05, 2025 02:59 AM

புதுச்சேரி:புதுச்சேரி காந்தி வீதியில்,அமைந்துள்ள செல்வாஸ் பில்டிங்கில், வெனியூ சலுான் உயர்தர அழகு நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. சமூக ஆர்வலர் டாக்டர் அனிதா ரீமேன் அழகு நியைத்தை திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி நடிகை ரேமா அசோக் பங்கேற்று வாழ்த்தினார். அழகு நிலையத்தில் சிறந்த தரத்திலான சிகை அலங்காரம், முக அலங்காரம் மற்றும் அனைத்து விதமான அழகூட்டல் சேவைகள் மிக உயர்ந்த தரத்தில் அளிக்கப்பட உள்ளது.
விழாவில் சென்னை வெனியூ சலுான் உரிமையாளர்கள் முத்துராம்,மார்ட்டின் தொழிலதிபர்கள் செல்வாஸ் அசோகன், செல்வராஜ்,சரவணன்,பழனிவேல், டாக்டர்கள் பிரியன் வால்ட்டர், அகிலா,அமுதகணேஷ் மோனிஷா, அஷ்வினி பங்கேற்றனர்.
ஏற்பாடுகளைஅழகு நிலையத்தின் புதுச்சேரி பகுதி உரிமையாளர் செல்வாஸ் க்ளோ ஸ்டூடியோவின்பங்குதாரர்கள்ஆனந்தவல்லி, ஜெயதுர்கா, தேவி, பேபி, பத்மபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.