தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமி கொலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சிறுமி கொலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சிறுமி கொலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு


UPDATED : மே 07, 2026 07:07 PM

ADDED : மே 07, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2026 07:07 PM ADDED : மே 07, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை 9 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்க அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், போக்சோ விரைவு நீதிமன்றம் வழக்கை (8ம் தேதிக்கு) ஒத்தி வைத்துள்ளது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மார்ச் 2ம் தேதி, வீட்டின் அருகே விளையாடியபோது மாயமனார். முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியபோது, மாயமான சிறுமி கொலை செய்து, கை, கால்கள் கயிற்றால் கட்டி, உடலை வேஷ்டியில் சுற்றி கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டிருந்தார். சிறுமியின் உடல் ஜிப்மரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமி மாயமான வழக்கு, இந்திய தண்டனை சட்டம் 302 - (கொலை), 363 - (கடத்தல்), 342 - (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்), 201 - (குற்றத்திற்கான சாட்சிகளை மறைத்தல்), போக்சோ பிரிவு, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து, கஞ்சா போதைக்கு அடிமையான முத்தியால்பேட்டை சோலை நகர், அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெரு முனுசாமி மகன் கருணா (எ) கருணாஸ், 18; முத்தியால்பேட்டையைச் சேர்ந்த விவேகானந்தன், 56; இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பர் 16ம் தேதி கழிப்பறை அருகே உள்ள இரும்பு கம்பியில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து, வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடந்தது. இவ்வழக்கு தொடர்பாக 560 பக்க குற்றப் பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி தீர்ப்பு அளித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என அறிவித்தார்.

தொடர்ந்து, மே 5ம் தேதி இரு தரப்பு வாதத்திற்கு பிறகு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என, தெரிவித்தார்.

அதன்படி, மே 5ம் தேதி அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன், சிறுமி குடும்பத்தின் உதவி வழக்கறிஞர் பிரவீன் ஆகியோர் ஆஜராகி 20 பக்க எழுத்து பூர்வமான வாதத்தை முன் வைத்தனர். அதில், குற்றவாளிக்கு ஏன் மரண தண்டனை விதிக்க வேண்டும் என 10 விதமான மேற்கோள்களை சுட்டிக்காட்டினர்.

அதற்கு, நீதிபதி சுமதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றால், அரசு சமூக நலத்துறை மூலம் அவரது குடும்ப பின்னணி குறித்தும், அவர் மீது ஏதேனும் வழக்கு உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டு, வழக்கை 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தொடர்ந்து (7 ம் தேதி) காலை 10:30 மணிக்கு குற்றவாளி கருணாசை, போலீசார் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், அரசு சமூக நலத்துறை மூலம் குற்றவாளியை பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரு தரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதம் நடந்தது. இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி சுமதி, வழக்கின் தீர்ப்பை (8ம் தேதி)க்கு ஒத்தி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us