/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பல்கலையில் கருத்தரங்கு துணைவேந்தர் துவக்கி வைப்பு
/
தொழில்நுட்ப பல்கலையில் கருத்தரங்கு துணைவேந்தர் துவக்கி வைப்பு
தொழில்நுட்ப பல்கலையில் கருத்தரங்கு துணைவேந்தர் துவக்கி வைப்பு
தொழில்நுட்ப பல்கலையில் கருத்தரங்கு துணைவேந்தர் துவக்கி வைப்பு
ADDED : நவ 03, 2025 04:36 AM

புதுச்சேரி:  புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர் சங்கம் சார்பில், 'நவீன வளர்ச்சிகள் மற்றும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்தை துணை வேந்தர் மோகன் துவக்கி வைத்து, தொழில், கல்வி இணைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். தனியார் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் விக்னேஷ் கார்த்திக், அரவிந்தன், ஸ்ரீனிவாஸ், சரவணன் மற்றும் சிந்தா விஷ்ணு கவுஷிக் ஆகியோர் பங்கேற்று தொழில்துறை அனுபவங்கள், தொழில் முன்னேற்ற நடைமுறைகள், பணிசார் எதிர்பார்ப்புகள் மற்றும் விரைவாக மாற்றமடைந்து வரும் தகவல் தொழில் நுட்ப சூழல் குறித்து மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதில், 350 க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் இளவரசன் வரவேற்றார். பல்கலை மேம்பாட்டு இயக்குநர் செல்வராஜூ மற்றும் கணினியியல் துறை தலைவர் ஸ்ரீநாத் வாழ்த்தி பேசினர்.
பேராசிரியர் கல்பனா தொகுத்து வழங்கினார். பேராசிரியர் சாருலதா ஒருங்கிணைத்தார். பேராசிரியர் ஜெயபாரதி நன்றி கூறினார்.

