/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ஜனாதிபதி வேட்பாளர் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
துணை ஜனாதிபதி வேட்பாளர் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
துணை ஜனாதிபதி வேட்பாளர் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
துணை ஜனாதிபதி வேட்பாளர் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : ஆக 18, 2025 04:09 AM
புதுச்சேரி: தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி;
இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணன், அறிவாற்றலும், செயல்திறனும் மிக்கவர். தேசத்தைத் தனது உயிராகப் போற்றுபவர்.
இந்தியக் குடியரசின் துணை ஜனாதிபதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த தேசமும் போற்றுகின்ற வகையில் தனது சேவையைத் தொடர அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.