/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடை உரிமையாளரை தாக்கும் வீடியோ வைரல்
/
கடை உரிமையாளரை தாக்கும் வீடியோ வைரல்
ADDED : அக் 17, 2024 04:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா சிலை அருகே உள்ள தனியார் பார் அருகில் பெட்டி கடை நடத்தி வருபவர் சந்திரன். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த மூன்று ரவுடிகள், அவரிடம் சிகரெட் மற்றும் மாமுல் கேட்டு மிரட்டினர்.
அதற்கு சந்திரன் மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள் கடையில் இருந்த சோடா பாட்டில் உள்ளிட்ட இதர பொருட்களை வைத்து சந்திரன் தலையில் பயங்கரமாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் சந்திரன் சத்தம் போட்டதை அடுத்து அவர்கள் மூவரும் தப்பியோடினர்.
படு காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறித்து சி.சி.டி.வி., காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.